சங்கீத மேகம் இசை நிகழ்ச்சி
Posted by Admin on 12th April 2025

டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு துவங்குவதை முன்னிட்டு Vijay TV புகழ்ப் பாடகர்களுடன் சென்னை இசைக் கலைஞர்களும் பங்கேற்கும் “சங்கீத மேகம்” “Hits of SPB” இசை நிகழ்ச்சியை நம் சங்கம் நடத்துகின்றது.
இந்நிகழ்ச்சி வரும் 27.04.2025 ஞாயிறன்று மும்பை, செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
சங்க உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு நுழைவுச் சீட்டு (இருக்கை) இலவசமாக வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் வேண்டுவோர் அவரவர் விருப்பப்படி அன்பளிப்பு உரு.499/- உரு.300/- உரு.150/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும். இருக்கைகள் பதிவு செய்ய கடைசிநாள் 10.04.2025

கீழ்க்கண்ட QR code-இல் பணம் செலுத்தி இருக்கையை உறுதிப் படுத்துங்கள். QR கோடில் பணம் செலுத்திய பின்னர் கீழே தரப்பட்டுள்ள செல்பேசிக்கு பணம் செலுத்திய விவரங்களை WhatsApp மூலம் தெரியப்படுத்தி தங்கள் இருக்கைகளை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
வணிகர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. உரு.5,000/- செலுத்தினால் அரங்கத்தில் உங்கள் வணிகம் பற்றிய விவரங்களை அரங்கத்திற்கு வரும் அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வசதிகள் உண்டு.
மேலும் விவரங்களுக்கு 98200 30865 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.